தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
165
A message to all the colleges in Tamil Nadu! The order issued by the High Court!
A message to all the colleges in Tamil Nadu! The order issued by the High Court!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

மதுரை கேகே நகரை சேர்ந்த பொழிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தமிழகத்தில் கல்லூரிகள் அதிகளவு பெருகி வருகின்றது.கடந்த ஆண்டு முதல் பெண்கள் அதிகளவு உயர்கல்வியில் பயின்று வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான கல்வி அறிவு இருக்கும் நிலையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதனால் தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரம் வைக்கபடுவதோடு அவற்றின் முறையாக அப்புறப்படுத்துவதற்கும் வசதிகளை செய்து கொண்டுக்க வேண்டும் என கோர பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.அதோடு மனுதாரரிடம் தென் மாவட்டங்களில் மட்டும் குறிபிட்டது கூறியது எதற்கு தமிழ்நாடு முழுவதும் என கூறியிருக்கலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் குறிப்பிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரர் இந்த வழக்கில் யுஜிசி தலைவரையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் வழக்கு குறித்து மனுதாரர் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என கூறி வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Previous articleதிமுக-வில் உருவாகும் ஏக்நாத் ஷிண்டே.. பாஜகவின் கைப்பிடியில் கனிமொழியா?? குட்டை உடைத்த மாஜி அமைச்சர்!!
Next articleஇரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்!