திமுக-வில் உருவாகும் ஏக்நாத் ஷிண்டே.. பாஜகவின் கைப்பிடியில் கனிமொழியா?? குட்டை உடைத்த மாஜி அமைச்சர்!!

திமுக-வில் உருவாகும் ஏக்நாத் ஷிண்டே.. பாஜகவின் கைப்பிடியில் கனிமொழியா? குட்டை உடைத்த மாஜி அமைச்சர்!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளையொட்டி பல மாவட்டங்களிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு அமைச்சர்கள் தலைமையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற கலந்து கொண்டார்.

அவ்வாறு கலந்து கொண்டு பேசியது தற்பொழுது அரசியல் சுற்று வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு நேரடியாக ஓபிஎஸ்யும் தாக்கி பேசியது அவர் அணியிடையே கொந்தளிப்பை கிளப்பி உள்ளது.

அந்த வகையில் அவர் பேசியதாவது, எப்பொழுதெல்லாம் அதிமுக எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையில் அமர்கிறதோ அதற்கு அடுத்த ஆட்சியில் மிகப்பெரிய வெற்றி வாகையை சூடும். அந்த வகையில் 1989ல் இருந்து தற்போது வரை நடைபெற்று வருகிறது. 1989 ஆம் ஆண்டு அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து அதுவே 1991 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அதனைத் தொடர்ந்து அதிமுக வெற்றி வாகையே சூடி வந்த நிலையில் தற்போது மீண்டும் எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்துள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள ஆளும் கட்சியால் எதிர்க்கட்சி நாற்காலியில் கூட உட்கார முடியவில்லை. அவ்வாறு உட்காருவதற்கும் விஜயகாந்த் அவர்களையே நாடி இருக்க வேண்டி இருந்தது.

தற்பொழுது அடுத்த முதல்வர் உதயநிதி தான், உதயநிதி என்று பெருமளவில் பயமுறுத்தி வருகின்றனர். ஆனால் நாங்கள் எல்லாம் அவருடைய அப்பா தாத்தா என அனைவரையுமே பார்த்து விட்டோம், உதயநிதி என்ன உதயநிதி? எங்களிடம் இந்த மாதிரி பூச்சாண்டி காட்டுகின்ற வேலையெல்லாம் வேண்டாம்.

மேலும் டீக்கடையில் வேலை செய்தவரை எல்லாம் எம்எல்ஏவாக உருமாற்றி மூன்று முறை முதலமைச்சர் ஆக பதவி வகிக்க வாய்ப்பு கொடுத்தது இந்த அதிமுக தான்.அவ்வாறு பதவி கொடுத்த அதிமுக அலுவலகத்தையே காவல்துறை உதவியுடன் அடித்து உடைக்க முன் வந்துவிட்டார் ஓ பன்னீர்செல்வம் என நேரடியாக அவரை தாக்கி பேசினார்.

அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவில் எவ்வாறு பாஜக ஊடுருவி ஏக்நாத் ஷிண்டே மூலம் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டதோ அதேபோல திமுகவிலும் ஒருவர் உள்ளார். மகராஷ்டிராவில் வந்தது போல் திமுகவிலும் ஏக்நாத் ஷிண்டேவாக கனிமொழி கூட வர வாய்ப்புள்ளது. கனிமொழிக்கு அடுத்த அது துரைமுருகனாகவும் இருக்கக்கூடும்.

ஆட்சியை கலைத்து வேறொருவர் மூலம் ஆட்சியைப் பிடிக்க திமுகவிலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம் என்று குட்டு வைத்து தனது பேச்சை முடித்துக் கொண்டார்.இவர் கூறுவது போல் பார்த்தால் சமீபத்தில் கூட கனிமொழியின் அவரது தாயார் மருத்துவ செலவினங்களுக்கு நேரடியாக மாநில அரசு கூட உதவாமல், மத்திய அரசு உதவியது சற்று சந்தேகிக்கும் படி உள்ளது.