படுத்தி எடுக்கும் வறட்டு இருமல் இனி வராமல் இருக்க உதவும் அதிசய பூ!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

Photo of author

By Divya

படுத்தி எடுக்கும் வறட்டு இருமல் இனி வராமல் இருக்க உதவும் அதிசய பூ!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

காலநிலை மாற்றத்தால் கடுமையான வறட்டு இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.இரவு நேரங்களில் தான் இந்த வறட்டு இருமல் கடுமையான தொந்தரவுகளை கொடுக்கும்.இந்த பாதிப்பில் இருந்து விடுபட வாழைப்பூவுடன் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பூ
2)சீரகம்
3)மிளகு
4)உப்பு
5)பூண்டு

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூ எடுத்து முறையாக சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை பொடியாக நறுக்கி தண்ணீர் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் 3 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு உரலில் 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.விருப்பப்பட்டால் ஒரு வர மிளகாய் சேர்த்து இடித்துக் கொள்ளலாம்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்க்கவும்.

பிறகு இடித்த சீரகம்,மிளகு,நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து கலந்து விடவும்.வர மிளகாய் இடித்து வைத்திருந்தால் அதையும் சேர்க்கவும்.

இதை 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு அதில் சுவைக்காக உப்பு சேர்த்து கலக்கி அருந்தவும்.இந்த வாழைப்பூ பானம் வறட்டு இருமல் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்து விடும்.

வாழைப்பூவில் ரசம்,கஷாயம் செய்து குடித்தாலும் வறட்டு இருமல்,தீராத சளி பாதிப்பு எளிதில் குணமாகும்.