காங்குவாவில் உள்ள குவாங்கோ நகரில் பெயரே அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 143 மக்கள் பலியானதாக கூறப்படுகிறது. 200 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சாதாரண கிளைமேட் காரணமாக வரும் காய்ச்சல் போல் அல்லாமல் இது மிகவும் மோசமான ஒன்று. இந்த நோய் தாக்கும் நபருக்கு சளி இருமல் அதிக காய்ச்சல் உடல் வலி தலைவலி தும்மல் மூக்கடைப்பு தொண்டை புண் கண்களில் நீர் வடிதல் மூக்கிலிருந்து சளி தொண்டைக்குள் செல்வது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு பாதிக்கபடுகிறார்கள். இது முதலில் காய்ச்சலில் தொடங்கி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளுகிறது.
இதன் காரணமாகவே காங்கோ நகரில் 143 பேரை காவு வாங்கியுள்ளது இந்த மர்ம நோய். இந்த நோயின் தாக்கமானது நவம்பர் 10 முதல் தொடங்கியது ஆனால் நவம்பர் 25 க்குள் இத்தனை உயிர்களை வாங்கியது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே காங்கோ நகரில் தான் mpox என்ற நோய் பரவி 47,000 கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1500 கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது பெயர் தெரியாத மர்ம நோய் பரவி மீண்டும் மக்கள் உயிரை பறிக்கிறது.