IPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!

Photo of author

By Vijay

IPL: இந்த முறை நடைபெறவுள்ள ஐ பி எல் மெகா ஏலம் இதுவரை நடந்தது போல் அல்லாமல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

தற்போது நடைபெற உள்ள ஐ பி எல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரையில்  இல்லாத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு ஏலத்தில் பங்கேற்கும் என ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் தொடர் 2025 மார்ச் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த தொடருக்கு முன் இந்த மாதம் இந்த தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் நடைபெறும் முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

அதில் மொத்தம் பத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 46 வீரர்கள். மேலும் இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 1574 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மெகா ஏலம் இந்த மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

சர்வதேச அணிகளில் ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கான ஏலம் முதல் சுற்றில் பங்குபெறும். இந்த சுற்றில் அனைத்து அணிகளின் தொகையில் 50% செலவு செய்து விடும். ஆனால் இந்த முறை அதிக அளவில் வீரர்கள் பங்கேற்ப இருப்பதால் இந்த முறை அவர்களை ஒரே குழுவாக அறிவிக்காமல் இரண்டு குழுவாக பிரிந்து ஏலம் நடைபெறவுள்ளதாக ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது