காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலி!!

Photo of author

By Savitha

தாம்பரம் மாநகர காவல் பகுதியில் ரோந்து பணிகளை கண்காணிக்க புதிய செயலியை
மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களில் உள்ள பகல் மற்றும் இரவு ரோந்து பணிகளை நவீன படுத்தும் வகையில் ரோந்து போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து பணி செய்கின்றார்களா என்பதை அந்தந்த போலீஸ் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய செயலியை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிமுகப்படுத்தி ரோந்து பணிகள் கண்காணிபாபையும் தொடங்கி வைத்தார்.

இந்த செயலி மூலம் ஒவ்வொரு காவல் அதிகாரிகளும் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ரோந்து போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சரியாக ரோந்து பணி செய்கின்றார்களா என அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர இணை கமிஷனர் மூர்த்தி, பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா கலந்து கொண்டனர்.