வேலூரை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது!!

0
203
#image_title

வேலூர் காட்பாடியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவைபுரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில். திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை அவருக்கு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ரத்னா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி, சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில், சித்திரைத் திருநாளையொட்டி, சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனையை(trial video calling) சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் தலைமை இயக்குனர் டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமையிட டி.ஐ.ஜி. ஆர். கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இந்த வீடியோ அழைப்பு வசதி மூலம் ஒரு மாதத்தில் 10 முறை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒவ்வொரு அழைப்பிலும் 12 நிமிடங்கள் வரை பேச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சிறைவாசி மாதத்திற்கு மொத்தம் 120 நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்படுவர்.

அந்த வகையில், புழல் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகள் பிரிவில், 1 மாதம் சோதனை நடத்தப்படும் என்றும் அதன்பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்த வசதி தொடங்கப்படும் என்றும் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி கூறியுள்ளார்.

நீண்ட தூரத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் அவர்களை நேரடியாக சிறைக்கு வந்து சந்திக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த வசதிகள் சிறைவாசிகளுக்கு சிறந்த குடும்ப இணைப்பை வழங்குவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் சிறைவாசிகளின் மனதில் இத்திட்டம் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உதவும் என்றும் அம்ரேஷ் பூஜாரி குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Savitha