இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

Photo of author

By Parthipan K

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.

இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக  புதிய பேருந்து நிலையம் தொடங்க உள்ளது.

இதற்கென்றே தமிழக அரசு ரூ.31,57 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பேருந்து நிலையம் புதிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.இதனை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கு  வருகை தந்த ஆட்சியர் மற்றும் சட்டபேரவை உறுப்பினர்கள் இணைந்து இந்த பேருந்து நிலையம் அமைவதற்கான முதல் கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்  இந்த பேருந்து நிலையம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி  முடிக்கப்படும் என்று கூறினார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது என்றார்.

மேலும் பழைய பேருந்து நிலையத்தில் 13 பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படும் வசதி இருந்த நிலையில் இந்த புதிய பேருந்து நிலையத்தில் 56  பேருந்துகள் வரை நிறுத்த முடியும் என்ற அளவிற்கும் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த பேருந்து நிலையம் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று ஆட்சியர் கூறினார்.