cricket: இந்திய அணியில் இரண்டாவது போட்டியில் தோல்விக்கு பின் பேட்டிங் வரிசையை மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியில் 3 வது போட்டியில் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வென்று சமநிலையில் உள்ளன.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இறுதி சுற்றுக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் 5 ல் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மீதம் உள்ள மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 6 வதாக களமிறங்கினார். இதற்கு காரணம் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை. அதனால் முதல் போட்டியில் களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை அபாரமாக விளையாடி ரன் சேர்த்து சாதனை படைத்தது. அதனால் ரோஹித் சர்மா 6 வது வரிசையில் களமிறங்கினார்.