குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்! முதல் கட்டமாக இரண்டு மாவட்டங்களில் நடைமுறை!
பொது சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.அந்தவகையில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய்,இளம் பிள்ளை வாதம்,கக்குவான் இரும்பல்,ரண ஜன்னி,தொண்டை அடைப்பான்,இன்ப்ளூயன்ஸா தொற்று,நிமோனியா,வயிற்றுப்போக்கு,தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு போன்ற பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்கு 9.4 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.இந்த தடுப்பூசியானது ஆரம்ப சுகாதார நிலையங்கள்,வட்டார மருத்துவமனைகள்,மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் வழங்கப்டுகிறது.இதுவரையிலும் தடுப்பூசி தவணைக்கென தனியாக புத்தகம் அல்லது அட்டைகள் வழங்கப்படுகிறது.
ஓவ்வொரு முறையும் அந்த அட்டையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி விவரம் பற்றி கைகளால் எழுதிக் கொடுக்கப்படும்.இந்நிலையில் மத்திய அரசின் யூ-வின் செயலி மூலமாக தடுப்பூசி சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த நடைமுறை சோதனை முயற்சியாக சில இடங்களில் மட்டும் முதல்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல்,ஈரோடு மாவட்டங்களில் அமலாகியுள்ளது.இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கும் முறை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.இதன் மூலம் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தடுப்பூசி தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி யூவின் செயலியில் அதை எந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.