china: புதிதாக பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவுடன் கைகோர்க்க உள்ள நாடால் சீனாவுக்கு ஏற்படும் தலைவலி.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்க போன்ற நாடுகள் ஒன்றிணைந்து உறுப்பினராக உள்ள அமைப்பு பிரிக்ஸ் அமைப்பு. இந்த அமைப்பானது ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை விட அதிக ஆதிக்கம் செலுத்த உருவான ஒரு அமைப்பு தான் இது.
தற்போது இந்த பிரிக்ஸ் அமைப்பில் இந்தோனேசியா இணைந்துள்ளது. இந்த திடீர் இணைவை அனைவரும் சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடந்தேறியுள்ளது என கூறி வரும் நிலையில் தற்போது இந்த கூட்டணி இந்தியாவிற்கு தான் பலம் சேர்க்கும் மற்றும் மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இதில் இந்தியாவை பொறுத்த வரை எண்ணெய்கள் இரும்புகள் தாதுக்கள் அழகுசாதனங்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு இந்தோனேசியா இறக்குமதி செய்கிறது. இந்த பொருட்களுக்கான தேவைகள் தற்போது அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரிக்ஸில் இந்தோனேசியா இணைந்தது இந்தியாவின் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என கூறப்படுகிறது.
இந்த வர்த்தகம் இனி எந்த தடையும் தாமதமும் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சீனாவுக்கு என்னவென்றால் சீனா ஒரு சில நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டு வந்தது. அதில் இந்தோனேசியாவும் ஒன்று இப்போது பிரிக்ஸ் ஸில் இணைந்ததால் தற்போது கட்டுப்படுத்த முடியாது. இப்போது இந்தியாவுடன் கை கோர்த்தால் சீனாவுக்கு தலைவலியாக மாறும்.