ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். டசால்ட் நிறுவனத்தின் இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. குறிப்பாக ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான எம்.பி.டி.ஏ.வின் ‘மெடடோர்’ ஏவுகணை (வானில் இருந்து வானுக்கு) மற்றும் ஸ்கால்ப் நாசகாரி ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் பெற்றவை ஆகும்.
கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு அப்பால் சென்று தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணைகளான ‘மெடடோர்’ ஏவுகணைகள், ஒரு புரட்சிகர தயாரிப்பாகும். அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பொதுவாக எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் வகையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.