புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

Photo of author

By Pavithra

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

Pavithra

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

தொடர் கனமழையின் காரணமாக,ப்ளூ காய்ச்சல் கடந்த இரண்டு மாதங்களாக அதிதீவிரமாக பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை பரவி வருகிறது.இதிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,மீண்டும் ஒரு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

அதாவது தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்து பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் பகுதியில் ஐந்து பேருக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு எலி காய்ச்சலால் பாதித்து இருப்பதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.இந்த ஐந்து பேரில் 11 வயது சிறுமியும் ஒருவர் ஆவார்.

மேலும் இந்த 11 வயது சிறுமிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீதி நான்கு பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.