சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!

0
93

சைலண்டாக இந்தி திணிப்பை புகுத்தி வரும் மத்திய அரசு! கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வைத்திருக்கும் செக்!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இந்தி எதிர்ப்பு மற்றும் ஆதரவு கருத்துக்கள் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சைலண்டாக இந்தி மொழியை திணித்து வருவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.

 

மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.1950 ஆம் ஆண்டு வெறும் 3 பள்ளிகளுடன் துவங்கி இன்று நாடு முழுவதும் 1248 பள்ளிகள் இயங்கி வருகிறது.மேலும் இந்தப் பள்ளிகள் அயல் நாட்டிலும் இருக்கின்றன.இதில் தமிழ்நாட்டில் 49 பள்ளிகள் இருக்கின்றன.இந்தப் பள்ளியில் சிபிஎஸ்சி-க்கு இணையான பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.

 

மேலும் இந்தப் பள்ளி தனியார் பள்ளிகளை விட குறைந்த கட்டணமே வசூலிப்பதால் மக்கள் மத்தியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தனி மவுசு உண்டு.ஆனால் இந்த பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள்,பொது நிறுவன ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இந்த பள்ளியில் அவர்களுக்கு வழங்கப்பட்டது போக மீதம் இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே மற்ற பொதுப் பிரிவு மாணவர்களை சிறப்பு முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் மொழி பாடங்களை மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அந்த வகையில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம்,இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் படிக்கலாம்.

ஆனால் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் தமிழ் மொழி விருப்ப பாடமாக கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மாணவர் விரும்பினாலும் 6 ஆம் வகுப்புக்கு மேல் தமிழ் படிக்க முடியாத சூழல் உள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் 49 கேவி பள்ளிகளில் இந்தி மொழிக்கு 109 ஆசிரியர்களும் சமஸ்கிருதத்திற்கு 59 ஆசிரியர்களும் உள்ளனர்.ஆனால் தமிழ் மொழிக்கு ஒரு ஆசிரியர்கள் கூட நியமனம் செய்யப்படவில்லை என்று கடந்த ஆண்டு கேட்கப்பட்ட தகவல் அரியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை முறை அமலானாலும் விருப்ப பாடத்தின் அடிப்படையில் தமிழை ஒரு மாணவர்கள் கூட தேர்ந்தெடுக்க முடியுமா முடியாதா? என்று குழப்பத்துடன் கூடிய எதிர்ப்பும் தற்போது கிளம்பியுள்ளது.

author avatar
Pavithra