அங்கன்வாடி குழந்தைகளுக்கு அரசு வெளியிட்ட புதிய திட்டம்! ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பொருட்கள் வழங்கப்படும்!
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினார் அதில் கூறியதாவது ஆறு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக சத்து மாவு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பேறு காலத்திற்கு முன்பும் பேறுகாலத்திற்கு பின்பும் தாய்மார்களுக்கும் சத்து மாவு வழங்கப்படுகின்றது அவ்வாறு தரப்படும் சத்துமாவில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனையடுத்து இரண்டு வயது முதல் ஆறு வயது வரை உள்ள மிகுந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து மாவுடன் சேர்த்து பிஸ்கட்கள் வழங்க வேண்டும்.இதனை தொடர்ந்து ஒரு வயது முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக முட்டைகள் வழங்க வேண்டும் என நிபுணர் குழு கோரிக்கை விடுத்தது.
அந்த கோரிக்கையை அரசு விசாரணை செய்தது.நிபுணர்களின் பரிந்துரையின் படி ஆறு மாதம் முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவில் மாற்றங்கள் கொண்டு வரவும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவில் சில பொருட்களை கூடுதலாக சேர்க்கவும்.அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
அதனையடுத்து அங்கன்வாடி மையங்களில் உள்ள ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கூடுதலாக இரண்டு முட்டைகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.