இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது இந்த போட்டி தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என களமிறங்கியது இந்திய அணி.
ஆனால் இந்திய அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. கபா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. இதனால் இந்திய அணி இனிவரும் இரண்டு போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு முழுவதும் நான்காவது போட்டியின் மீது உள்ளது.
இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நான்காவது போட்டியில் வலை பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்ட புகைப்படம் வெளியாகி வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வருகிற 26 ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நான்காவது போட்டியில் இருந்து நடைபெற உள்ளது.