இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 1 மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை நழுவ விட்டது.
அடுத்து இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன் இந்திய அணி 2013 இல் ஒரு நாள் கோப்பை தொடரை வென்றது. அதன் பின் எந்த ஒரு பெரிய போட்டிகளில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வென்றதில்லை. இந்நிலையில் அடுத்து நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பும்ரா பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட மாட்டார் என கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதில் அவர் 8 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் பிப்ரவரி 20 பங்களாதேஷ் உடனும், 23 பாகிஸ்தானுடன் , மார்ச் 2 நியூசிலாந்து உடனும் விளையாடவுள்ளது. எனவே அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.இது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கலாக உருவாகியுள்ளது.