அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!!

0
26
#image_title

அரபிக்கடலில் உருவான புதிய புயல்!!! இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு!!!

அரபிக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தற்பொழுது புயலாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று(அக்டோபர்20) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(அக்டோபர்21) புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான புதிய புயலுக்கு தேஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தேஜ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக உருமாறும் என்ற வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேஜ் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் நகர்ந்து வரும் அக்டோபர் 25ம் தேதி ஓமன் மற்றும் ஏமன் பகுதியை ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு நகரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேஜ் புயல் காரணமாக குஜராத் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேஜ் புயல் ஓமன் நோக்கி நகர்வதால் குஜராத் மாநிலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் குஜராத் மாநிலத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.