bangladesh: வங்கதேசத்தில் உள்ள போராட்ட குழு புதிய பிரச்சனையை கிளறியுள்ளது. இதில் யூனுஷ் விரட்டப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் நீண்ட வருடங்களாக அவாமி லீக் கட்சிதான் ஆட்சியை நடத்தி வந்தது. இந்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா இவர் வங்கதேசத்தின் பிரதமராக செயல்பட்டு வந்தார். சென்ற ஆண்டு சுதந்திரத்தில் போராடி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து போராட்டம் ஒன்று வெடித்தது.
இந்த போராட்டத்திற்கு பின் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் வந்த பின் அடுத்ததாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறார். ஷேக் ஹசீனா நமது நாட்டுடன் நட்புறவு கொண்டவர். ஆனால் முகமது யூனுஷ் செயல்பாடுகள் அதுபோன்று இல்லை.
அவர் பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நெருக்கமாக உள்ளார். இந்நிலையில் அவர் நாட்டை விரட்டும் அளவிற்கு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போராட்ட குழுவானது மீண்டும் வங்கதேச சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதாவது Revolutinary government அமைப்பதேயாகும். மேலும் இதற்கு தற்போது செயல்பட்டு வரும் அரசிடம் 15 நாட்கள் கெடு வைத்துள்ளது. இதில் யூனுஷ் ஈடுபாடு இல்லாதவர் அதனால் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் இவர் விரட்ட படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு விரட்டப்பட வில்லை என்றால் வேறு ஒரு வர தலைமையில் அரசாங்கள் செயல் படும்.