இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

0
126
A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!
A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!A new type of corona infection has been detected today! The report released by the World Health Department!

இன்று புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வகை! உலக சுகாதார துறை  வெளியிட்ட அறிக்கை!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் ஓமைகாரன் பாதிப்பு இருந்து வந்தது ஆனால் இந்த வகை கொரோனாவினால் பொதுவாக தீவிர பாதிப்பு இல்லாவிட்டாலும் இதன் பிரத்யேக அறிகுறிகளையும் யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொள்வதுமுக்கியமானது .

 முதல்கட்டமாக  BA5 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கியமான அறிகுறியாகும். காய்ச்சல் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும். தொண்டை வலியும் உடல் வலியும் கடுமையாக இருக்கும். மேலும் கடந்த அலைகள் போல் அல்லாமல் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன், எக்ஸ் ரே எடுக்க பரிந்துரைப்பதில்லை என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவிக்கிறார்.

 மேலும் தமிழகத்தில் தற்போது அதிகமாக பரவி வருவது ஒமைக்ரானின் ஒரு வகையான BA5 கொரோனாவாகும். ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த BA5 வகை ஜூன் மாதத்தில் 30% ஆக அதிகரித்துள்ளது.

ஆறு பேர் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அதில் மூன்று பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றும் கூறுகிறார். தடுப்பூசி ஒரு டோஸ் கூட செலுத்தாவர்களுக்கு நோய் தொற்று தீவிரமாக உள்ளது எனவும்கூறுகின்றார்கள் .

 மேலும் பூஸ்டர் டோஸ் போடாத இணை நோய்கள் கொண்ட முதியவர்களுக்கு புதிய வகை கொரோனா, டெல்டா போன்ற தீவிர பாதிப்பையே ஏற்படுத்துவதாக தொற்று நோய் நிபுணர் கூறுகிறார். மேலும் அதே போல் இளைஞர்கள் அனைவரும்  குறைந்தது இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார். மேலும்  நிகழ்ச்சிகள், சினிமா அரங்குகள், வெளியூர் பயணம் மேற்கொண்டவர்களுக்கே முதலில்  இந்த பாதிப்பு ஏற்படுகிறது எனவும் அவர்கள் மூலம் பிறருக்கு பரவுகிறது எனவும் கூறுகிறார்.

Previous articleநேற்றைய போட்டியில் கோலியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!..
Next articleஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்!