மூக்கின் வழியாக செலுத்தப்படும் புதியவகை கொரோனா தடுப்பூசி! இன்று முதல் அமல்!
கொரோனா தொற்றானது தற்பொழுது வரை குறையாமல் அதன் ஆதிக்கத்தை பெரும் வாரியாக செலுத்தி தான் வருகிறது. அதனை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டும் தற்பொழுது வரை குறைந்த பாடிஇல்லை. அதற்கு அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கொரோனா தொற்றின் தாக்கமானது ஏற்றும் இறக்கமாகவே தான் உள்ளது. இதனையடுத்து தற்பொழுது மூக்கு வலி தடுப்பு மருந்தை உபயோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
இந்த மூக்கு வழி தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகளை நடத்த முதலில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இந்தியாவின் 9 இடங்களில் இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து சோதனை நடைபெற்றது. அது வெற்றியடைந்ததை அடுத்து தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தால் குறைந்த காலத்திலேயே அதிகப்படியானவருக்கு செலுத்தி விடலாம் என பாரத் பயோடெக் கூறியது. இந்த மருந்தை கண்டுபிடித்த நிறுவனம் வைரஸ் ஆனது நமது மூக்கின் வழியாக தான் பரவுகிறது எனவே மூக்கின் வழியாக செலுத்தப்படும் இந்த மருந்தால் அது தடுக்கப்படும் என கூறியதும் குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் கொரோனா தடுப்பு மருந்தானது மூக்கின் வழியாக செலுத்தப்படும்.