குழந்தைகளை தாக்கிய புதுவகை கொரோனா வைரஸ்! பூனேவில் கண்டுபிடிப்பு!

0
117

பூனாவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் குரோனா வைரஸ் மற்றும் இணைக்கப்பட்ட அழற்சி நோய் ஒன்று குழந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது ஒரு அறிவிக்க தக்க நோயாக மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களில் குழந்தைகளில் மல்டி சிஸ்டம் அழற்சி நோய் , குரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்ட நோயை கவனிக்கும் படி மேலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் குழந்தை மருத்துவர் டாக்டர் சஞ்சீவி ஜோஷி கூறுகையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இந்த விதமான நோய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு காரணமாக அந்த குழந்தைகள் ஆன்டிபாடிகளை உருவாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் வீட்டில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

இதற்கான அறிகுறிகளாக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ,கடுமையான உடல் சோர்வு ,வயிற்று வலி ,தோலின் நிறம் மற்றும் நகரங்களின் நிறங்கள் மாறுவது, உறுப்புகள் மற்றும் திசுக்களில் வீக்கம், போன்றவை அறிகுறிகளாக கூறப்படுகிறது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என வந்தாலும் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் MIS- C நோய்க்கான சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான நோய் மட்டுமே உள்ளது. ஆனால் இந்த எம் ஐ எஸ் சி உருவாகும் குழந்தைகளில் இதயம், நுரையீரல், ரத்த நாளம், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை தோல் அல்லது கண்கள் போன்ற சில உறுப்புகளின் திசுக்கள் கடுமையாக பாதிப்படைகின்றன.

எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். பெரும்பாலான பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்ச்சலுடன் ஒரு லேசான நோயை தான் பெறுகிறார்கள். எவ்வாறாயினும் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எச்சரிக்கையோடு அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என்று டாக்டர் ஒஸ்வால் கூறியுள்ளார்.

Previous articleகே ஜி எஃப் யாஷ் செய்யும் செயல்! குவிந்து வரும் பாராட்டுக்கள்!
Next articleஇவருக்கு மகனா? ஆச்சரியமூட்டும் புகைப்படம்!