மக்கள் கவனத்திற்கு ;
தற்போது ஆந்திராவில் இரண்டு பேர் உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் “ஜிபிஎஸ்” (குயிலின் பார் சிண்ட்ரோம்) என்ற நோய் தொற்று இருந்தது, இந்நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்நிகழ்வு அங்குள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே யாரும் பயப்பட வேண்டாம் இது அவ்வளவு எளிதில் பரவ வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து கொண்டு போக வேண்டும் உடலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது என கூறப்பட்டு வருகிறது, எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், இந்த தொற்று பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இது தற்போது ஆந்திராவிலும் பரவியுள்ளது, எனவே ஆந்திர மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யா குமார் யாதவ் அவர்கள், மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் தொற்றுக்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த நோயினால் நரம்பு மண்டலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன என்று மருத்துவத்துறையில் கூறப்பட்டு வருகிறது, இது மற்ற வைரஸ் தொற்றுகள் ஏற்படும் போது இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
அறிகுறிகள்:
இவற்றின் அறிகுறிகள் கால்கள் மற்றும் கைகள் உணர்ச்சிகள் இல்லாமல் போதல் மற்றும் சரியாக சுவாசிக்க முடியாமல் போகும், போன்றவை இவற்றின் அறிகுறிகள் ஆகும். எனவே அவற்றை சரி செய்துவிடலாம் மேலும் இந்த நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் சுத்தமான முறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை சென்று பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.