வந்தது புதியவகை தடுப்பூசி.. இவர்களெல்லாம் கட்டாயம் போட வேண்டும்!! மத்திய சுகாதார அமைச்சகம் போட்ட அதிரடி உத்தரவு!!
கேரளாவில் தற்பொழுது நைல் என்ற காய்ச்சல் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 4 வருடங்களுக்கு முன்பு தோன்றிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தே மீள பல வருடங்கள் ஆனது. தற்போது எந்த ஒரு புதிய வாகை வைரஸ் தொற்று வந்துவிட்டாலும் அதற்கான முன்னடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து வைத்துவிட்டனர்.
இதே போல அண்டைய நாடான ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் என்ற தொற்றும் அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு போன்ற ஆபாயம் ஏற்படவில்லை. இருப்பினும் மேலும் மக்கள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். மஞ்சள் காய்ச்சல் தொற்றானது நமது நாட்டில் தற்பொழுது வரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதற்கான நாளடைவில் பரவாமலிருக்க பல பணிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும் நபர்கள் கட்டாயம் அதற்குரிய தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தடுப்பூசியானது தமிழ்நாட்டில் மூன்று மையங்கள் அமைத்து போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக 300 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியானது செலுத்தப்படும்.