அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!!

Photo of author

By Rupa

அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!!

கேரளாவை சேர்ந்த பலர் இந்த வெஸ்ட் நைல் என்னும் புதிய வைரஸால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வருவதால் மக்களிடையே பெரிதளவில் விழிப்புணர்வு இல்லை. ஆரம்பகட்ட அறிகுறியாக லேசான காய்ச்சல், உடம்பு வலி தலைவலி என்று ஆரம்பித்து இதன் விளிம்பானது சுயநினைவை இழக்கும் அபாயத்திற்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. இந்த நோய் தொற்றானது அதிகப்படியாக ஆலப்புழா திருச்சூர் மலப்புறம் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பரவலானது தற்பொழுது வரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என்றாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் மற்றும் சுகாதார தன்மையை பேணிக்காக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வைரஸ் தொற்றானது பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும் கொசுக்களிடமிருந்து மனிதர்களிடம் பரவுகிறது. ஆனால் ஒரு மனிதரிலிருந்து இன்னொரு மனிதருக்கு பரவுவதில்லை. அதனால் மக்கள் பெரும்பான்மையாக வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் கொசு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர்.

நமது அண்டை நாடுகளான ஐரோப்பா மத்திய ஆசியா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஒரு நபருக்கு தொடர் காய்ச்சல் வாந்தி உள்ளிட்ட உடலில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக எலைசா அல்லது பிசிஆர் போன்ற சோதனை செய்து இந்த வெஸ்ட் நைல் வைரஸ் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளும்படியும் கூறியுள்ளனர்.