தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

0
241
#image_title

தானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!

கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் நேற்று மீண்டும் ஒரு சாதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தானாகவே தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய மறுசுழற்சி ராக்கெட்டை இஸ்ரோவுடன் இணைந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை ஒன்றிணைந்து இந்த ராக்கெட்டை வடிவமைத்திருந்தது.

முன்னேறிய நாடுகள் சில ஏற்கனவே மழுசுழற்சி ராக்கெட் மற்றும் தானாக தரையிறங்கும் வகையிலான ராக்கெட்டுகளை தயாரித்து சாதனை படைத்துள்ளன அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

இன்று காலை கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள டி ஆர் டி ஓ ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய ராக்கதற்கான சோதனை நடத்தப்பட்டது இதில் வெற்றிகரமாக மறுசுழற்சி ராக்கெட் தானாக தர இயங்கியதை தொடர்ந்து சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

தற்போது வரை விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் கடலில் விழுந்தவுடன் அதன் பாகங்களை எடுத்து வந்து மீண்டும் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இது புறப்பட்ட இடத்திற்கு மீண்டும் வரும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வருவதால் இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Previous articleகும்கி யானை அருகே வந்த அரிக்கொம்பன்!! மோதல் ஏற்படாமல் இருக்க பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை!!
Next articleபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!