கும்கி யானை அருகே வந்த அரிக்கொம்பன்!! மோதல் ஏற்படாமல் இருக்க பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை!!

0
150
#image_title

கும்கி யானை அருகே வந்த அரிக்கொம்பன்!! மோதல் ஏற்படாமல் இருக்க பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறை!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் சாந்தன்பாறை பகுதியிலுள்ள மக்களைன் அச்சுறுத்தி வரும் காட்டுயானை அரிக்கொம்பனை மய்க்க ஊசி செலுத்தி பிடித்து கூண்டில் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்து அதற்கான பணிகளை முடித்து யானையை பிடிக்க வயநாட்டிலிருந்து 4 கும்கியானைகள் மற்றும் சிறப்புக்குழுவினர் சின்னக்கானல் பகுதிக்கு வந்த நிலையில் அரிகொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரளா உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மேலும் இது குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது . மேலும் இந்த கும்கி யானை மற்றும் சிறப்புக்குழுவினர் யானையை கண்காணிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சின்னக்கானல் சிமெண்ட பாலம் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த கும்கியானையான கொன்னி சுரேந்திரன் அருகே திடீரென அரிக்கொம்பன் வந்ததால் பதற்றமடைந்த வனத்துரையினர் மற்றும் யானை பாகன்கள் மற்றும் சிறப்புக்குழுவினர் அரிக்கொம்பனை பட்டாசு வெட்டித்து கும்கியானையிடமிருந்து விரட்டினர்.

author avatar
Savitha