புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்டிராய்டு செயலி!! இதன் சிறப்பம்சங்கள் இதோ!!

Photo of author

By CineDesk

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்டிராய்டு செயலி!! இதன் சிறப்பம்சங்கள் இதோ!!

CineDesk

A newly introduced Android app!! Here are the highlights!!

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆண்டிராய்டு செயலி!! இதன் சிறப்பம்சங்கள் இதோ!!

உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது.

நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் ஏஐ சாட்போட் ஆன சாட்ஜிபிடி- யின் ஆண்டிராய்டு செயலி ஒன்று இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது அறிமுகபடுத்தப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வந்தது. இதில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்களான,
இது சாட்போட் பயனர்கள் கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் சுலபமாக பதிலளிக்கும். நாம் கேட்கின்ற கதை, கட்டுரை, கவிதை மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்திற்குமே நமக்கு பதில் அளிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலி முதன் முதலாக நேற்று இரவு முதல் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியை இந்தியாவில் மட்டும் அல்லாமல், அமெரிக்கா, வங்காளாதேஷ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும், இந்த செயலியை ஏற்கனவே, ஐபோன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.