விருதுநகரில் தமிழக காவல்துறை என்ற பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு துவங்கி காவல்துறை மீது அவதூறு பரப்பிய நபர் கைது.
தமிழ்நாடு காவல்துறை என்ற பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கி அதில் காவல்துறை மீது அவதூறு பதிவுகள் வருவதாக விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சைபர் கிரைம் காவல் துறை சார்பு ஆய்வாளர் தலைமை யிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில் தமிழ்நாடு போலீஸ் என்ற பெயரில் போலியான முகநூல் பக்கம் தொடங்கி அதில் காவல் துறையின் முத்திரைவுடன் செயல்பட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் காவல்துறை மீது அவதூறு கருத்துக்களை பதிவு செய்த விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரிய வந்து உள்ளது. இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார்.
இதனையடுத்து முகநூல் பக்கத்தில் காவல் துறையின் முத்திரை மற்றும் தமிழ்நாடு காவல்துறை என்பதை தவறாக பயன்படுத்தி காவல்துறை மீது அவதூறு கருத்துக்களை பதிவு செய்த தமிழ்செல்வன் மீது சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.