ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

0
261
#image_title

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஷ் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

மயங்கி கிடந்த மகேசை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி தாலுக்கா, கவுண்டனூர் அருகே உள்ள மேட்டு கொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 30. திருமண வயதை கடந்தும் சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் தள்ளிப் போயுள்ளது. இதனால் விரக்தியில் இருந்து வந்த சரவணன் யாருமில்லாத சமயத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஇதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 
Next articleவயநாடு எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் மக்களவை செயலாளர் அறிவிப்பு !!