ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

Photo of author

By Parthipan K

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

இந்த காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வாங்கி வருகின்றனர்.அதனால் சில தொழில் நிறுவனகள் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.இந்நிலையில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது.அந்த திட்டத்தின் மூலம் பொருட்களை தேவைப்படும் பொழுது வாங்கி கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணம் கட்டி கொள்ளலாம் என்பது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.இந்த முறையை தற்போது ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் பெறுவதில் அறிமுகப்படுத்த உள்ளது.ஐஆர்சிடிசி கேஷ் இ என்ற நிறுவனத்துடன் இணைந்து டிரவெல் நவ் பே லேட்டர் என்ற திட்டம் அமலுக்கு வரவுள்ளது..

மேலும் பயணிகள் முன்பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கான பணத்தை கேஷ் இ நிறுவனம் செலுத்தி விடும்.அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பயணிகளிடம் இருந்து இஎம் ஐ வசதி அல்லது தவணை முறையில்  பணம் வசூல் செய்து கொள்ளலாம்.மேலும் இதற்காக வேறு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.