கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

0
147

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மரணம்! தற்கொலை இல்லை கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாமூரில்  உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவி மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டார். இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம்  மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாணவி பள்ளி சம்பந்தப்பட்ட காரணத்தினால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தனியுரிமை காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா?என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

 

அந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் ஆனது தற்கொலை இல்லை கொலை என்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleசூர்யாவின் வணங்கான் படத்தின்  புதிய அப்டேட்! இவர் தான் அந்த நடிகை வைரல் ஆகும் புகைப்படம்!
Next articleமன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!