சேலம் அருகே இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தில் கைதாகியுள்ள நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் சஞ்சீவராயன் பேட்டை அடுத்துள்ள தாதகப்பட்டியிலுள்ள லோகநாதன். அப்பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் சிலரை பணத்தாசையை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருந்தான்.
இவனும், இவனது மனைவியும் கடந்த வெகு நாட்களாக பிரதீப், சிவா ஆகியோரின் உதவியுடன் வறுமையில் உள்ள பெண்கள், கணவனை இழந்து தனிமையில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்துள்ளனர்.
அதற்கு சம்மதிக்காத பெண்களை லோகநாதனின் மனைவியின் மூலமாக ஆபாசமாக படமெடுத்தும் லோகநாதன் சம்மதிக்காத பெண்களை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களான பிரதீப், சிவா மூவரும் கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதன் பின்னணியில் யாருக்கெல்லாம் சம்மந்தம் இருக்கிறது என போலீஸார் விசாரித்து வந்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு லோகநாதனுக்கு கொரானா தொற்று இருப்பதை கண்டறிப்பட்டு லோகநாதன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவனிடம் விசாரணை நடத்திய போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு சம்மந்தப்பட்ட மகளிர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ” வச்சான் பாரு ஆப்பு ” என்பதற்கேற்ப குற்றவாளிக்கு கொரானா தொற்று இருப்பதைக் கண்டு மக்கள் நகைத்தனர். மேலும் லோகநாதன் போன்ற விஷக்கிருமிகளுக்கு தொற்று ஏற்பட்டு கொரானா தன் மதிப்பை இழந்து விட்டது எனவும் சிலர் கேலிக்கையாக பேசி வருகின்றனர்.