இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ??

0
178
A powerful earthquake struck near India this afternoon!! Tsunami will also come??
A powerful earthquake struck near India this afternoon!! Tsunami will also come??

இந்தியாவின் அருகே திடீரென இன்று மதியம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமியும் வருமோ??

இந்தியாவின் அருகில் இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர்.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து அருகில் உள்ள நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. அதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பர்மா போன்ற நாடுகளும் அடக்கம்.

இந்த சூழ்நிலையில் இன்று நண்பகல் சுமார் 12.31 மணி அளவில் இந்திய பெருங்கடலில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆனது இலங்கையின் தலைநகரான கொழும்புவில் இருந்து சுமார் 1326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பானது இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது. அதன் தலைநகர் கொழும்புவில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் இலங்கையிலும் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதால் இதுவரை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

 

 

 

Previous articleபாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!
Next articleபழி தீர்க்கும் முனைப்பில் இந்தியா!! முதலாவது அரையிறுதியில் சூரிய குமாருக்கு பதிலாக இவரா??