கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

Photo of author

By Divya

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி நன்றாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியை நீக்கி விடும்.

நம் முன்னேற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி.. ஒழிய சக்தி வாய்ந்த பரிகாரம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்:-

*பச்சரிசி
*மஞ்சள்
*மஞ்சள் காட்டன் துணி
*குண்டு மஞ்சள்
*படிகாரக் கல்
*ஒரு ரூபாய் நாணயம்
*எலுமிச்சம் பழம்

பரிகாரம் செய்வது எப்படி?

ஒரு கிண்ணத்தில் 1/4 கைப்பிடி அளவு பச்சரிசி போட்டு சிறிது மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் தெளித்து கலந்து விடவும்.

10 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு மஞ்சள் காட்டன் துணி எடுத்து அதில் இந்த மஞ்சள் அரிசியை கொட்டவும்.

அடுத்து அதில் ஒரு முழு எலுமிச்சம் பழம், ஒரு குண்டு மஞ்சள், ஒரு படிகாரக் கல், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று சேர்த்து மஞ்சள் நூல் கொண்டு அதை மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.

இதை வீட்டின் நிலைவாசல் முன் கட்டி வாரம் ஒருமுறை சாம்பிராணி, கற்பூர தீபம் காட்டி வர கண் திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் முன்னேற்றம் ஏற்படும்.