தலைமையுடன் பிரச்சனையா? டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை அளித்த விளக்கம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடந்த சில நாட்களாக கட்சியில் அவர் மீது எழுந்த புகார் மற்றும் கூட்டணி சம்பந்தமாக, அகில இந்திய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷாவை நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு டெல்லி சென்றார்.
டெல்லி தலைமையிடம் சந்திப்பை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய அவர், கட்சிக்கும் எனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, கட்சியின் வளர்ச்சிக்காக சில முடிவுகள் எடுக்கும் போது சில மூத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டு மற்ற கட்சிகளுக்கு சென்றனர், இதனால் தனக்கு வருத்தம் இல்லை.
தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக சில முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளும் போது கட்சியினர் இடையே மன வருத்தம் வருவது இயல்பான ஒன்றுதான், எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறோம். அதன்படியே நேற்று கட்சியின் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும்,
மேலும் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும், பல கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், அவர் அவர்களுக்கு தங்களது கட்சியினை வலுப்படுத்தி முன்னிலை படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர், அது போலவே பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்தில் முன்னிலை படுத்துவதற்கு பல நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே நேற்று டெல்லி சென்றதாக அண்ணாமலை கூறினார்,