அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் இசை மிக்ஸிங்… இசைப்புயல் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்டு வருகிறார்.
பிரம்மாண்டமாக மிக அதிக செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதையடுத்து நேற்று பொன்னி நதி பாக்கணுமே பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி , ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் பாடல் வெளியீட்டில் ரஹ்மான் கலந்துகொள்ளவில்லை. அவர் இந்தியா திரும்பியதும் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்தபடியெ பொன்னியின் செல்வன் படத்துக்காக 7.1 டால்பி இசை மிக்ஸிங் பணிகளை ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.