சிறுநீரக கல் அடைப்பை சரி செய்ய உதவும் அபூர்வ மூலிகை விதை!! இதை பாலில் கலந்து குடிங்க!

Photo of author

By Rupa

இக்காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக் கூடிய முக்கிய பாதிப்பு சிறுநீரக கல் அடைப்பு.உடலுக்கு போதிய தண்ணீர் அருந்தாமை,சிறுநீரை அடக்கி வைத்தல்,சிறுநீர் பாதை எரிச்சல் உள்ளிட்டவைகளால் சிறுநீரக கற்கள் உருவாகிறது.இதை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

1)நத்தை சூரி விதை – ஒரு ஸ்பூன்
2)பால் – 50 மில்லி
3)பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை:

நாட்டு மருந்து கடையில் நத்தை சூரி விதை கிடைக்கும்.தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.

தினமும் புதிதாக வறுத்து பொடி செய்து பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நத்தை சூரி விதை சேர்த்து லேசாக வறுக்கவும்.

பிறகு இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தெடுக்கவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 50 மில்லி பாலை ஊற்றி சூடாக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி நத்தை சூரி பொடி மற்றும் பனங்கற்கண்டு போட்டு கலக்கி குடிக்கவும்.இதனால் சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனை குணமாகும்.

மற்றுமொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)நத்தை சூரி விதை
2)தேன்

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து 10 கிராம் நத்தை சூரி விதை போட்டு வறுக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் அடைப்பு மற்றும் சிறுநீரக பாதை தொற்று சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1)நத்தை சூரி வேர்
2)பசும்பால்

செய்முறை:

நத்தை சூரி வேர் சிறிதளவு எடுத்து நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை காய்ச்சிய பசும் பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக கல் அடைப்பு சரியாகும்.

தேவையான பொருட்கள்:

1)நத்தை சூரி சூரணம்
2)தண்ணீர்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் நத்தை சூரி சூரணம் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் சிறுநீரக கல் அடைப்பிற்கு தீர்வு கிடைக்கும்.