நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

Photo of author

By Parthipan K

நீதிமன்றத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. இதில் காலியாக உள்ள  சட்ட அதிகாரி    பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய   பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுபிட்டுள்ளனர்.

தமிழக நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வழக்கறிஞர்களாக பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள் என்றும் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இந்த வாய்ப்பினை  அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர்.