DMK: திமுக நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆ . ராசா நேற்று நடந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் பாஜகவை ஒப்பிட்டு பேசியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாணவர் அணி சார்பில் நீலகிரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் ஆ ராசா கலந்து கொண்டார்.
அவ்வாறு அவர் கலந்து கொண்டு பேசியதாவது, சாமி எல்லாம் கும்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை தேவைப்படுவோர் வைத்து கும்பிடலாம், ஆனால் திமுக காரர்கள் பொட்டு வைத்து கரை வைத்த வேட்டி கட்டுவது அப்படியே சங்கீகள் போல் உள்ளது. நீங்களும் கயிறு கட்டுகிறீர்கள் சங்கிகளும் கயிறு கட்டுகிறார்கள் இதில் யார் திமுக காரன் என்ற வித்தியாசம் தெரிவதில்லை. அதனால் இனி வரும் நாட்களில் திமுக காரன் கரை வைத்த வேட்டி கட்டினால் பொட்டு வைக்க வேண்டாம்.
உங்கள் தாய் தந்தையார் விபூதி வைத்து விட்டால் வைத்துக் கொள்ளுங்கள். இதனை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் பொழுது குறிப்பாக திமுக வேட்டி கட்டும் பட்சத்தில் கட்டாயம் அதன் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். கொள்கை கடைபிடிக்காமல் போனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அழிந்துவிடும். அப்படிதான் தற்போது அதிமுக உள்ளது. எடப்பாடி தங்களின் அரசியல் கொள்கையை பின்பற்றுவதில்லை என இவர் கூறிய வீடியோவானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குங்குமம் வைப்பது கயிறு கட்டுவது என தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகார நோக்கில் பறிப்பதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.