மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!! தொடரும் கனமழை!!

0
118
A re-formed low pressure area!! Continued heavy rain!!
A re-formed low pressure area!! Continued heavy rain!!

சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவானது.

இந்த புயல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழைப்பொழிவு இதுவரை இல்லாத அளவிற்கு பொழிந்து உள்ளது.

இதனால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுத்தியது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த நிலையில் தெற்கு பகுதியில்- தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வருகிற 12-ம் தேதி தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் இயங்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
Next article5,500 கிலோ ரேஷன் அரிசி எலிகள் தின்று விட்டது!! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!!