மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த தகவலின் படி வரும் 16 ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.முன்னதாகவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில் தற்போது அவை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வட தமிழகம் நோக்கி நகர்வதால் டெல்டா பகுதியில் மழை குறையும் என அறிவித்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மீண்டும் காற்றழுத்தம் உருவாகவுள்ளது என தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று மிக கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.