Coriander seeds: நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனித்துவமான மசாலாப் பொருள் கொத்தமல்லி விதை.இந்த பொருள் அதிக வாசனை நிறைந்தவை மற்றும் மருத்துவ குணம் கொண்டவை ஆகும்.
கொத்தமல்லி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-
1)நார்ச்சத்து 2)கால்சியம் 3)இரும்புச்சத்து
4)மெக்னீசியம் 5)பொட்டாசியம் 7)செலினியம் 8)வைட்டமின் ஏ 9)வைட்டமின் சி
10)வைட்டமின் கே 11)போலிக் அமிலம்
கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்:
**உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வு கொத்தமல்லி விதை.இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய கொத்தமல்லி விதை உதவுகிறது.
**தைராய்டு பிரச்சனையை சரி செய்யும் மாமருந்து இந்த கொத்தமல்லி விதை.வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த கொத்தமல்லி விதை பானம் செய்து பருகலாம்.
**மாரடைப்பு,இதய நோய் பாதிப்புகள் வரமால் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி விதை பானம் செய்து பருகுங்கள்.
**இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கொத்தமல்லி பானம் செய்து பருகலாம்.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி பானம் எடுத்துக் கொள்ளலாம்.
**கொத்தமல்லி பானம் குடிப்பதன் மூலம் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை சரி செய்து கொள்ளலாம்.
**செரிமானப் பிரச்சனை சரியாக கொத்தமல்லி விதை பானம் செய்து பருகலாம்.வயிற்றுப்போக்கு,குமட்டல்,வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கொத்தமல்லி உதவுகிறது.
**கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் நீங்க கொத்தமல்லி பானம் செய்து பருகலாம்.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க கொத்தமல்லி பானம் பருகலாம்.
**இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கொத்தமல்லி பானம் செய்து பருகலாம்.
கொத்தமல்லி பானம் செய்முறை:
தேவையான பொருட்கள்:-
கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கிளாஸ்
உரலில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதை போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டி பருக வேண்டும்.இந்த கொத்தமல்லி பானத்தில் இனிப்பு சுவை எதையும் சேர்க்கக் கூடாது.
கொத்தமல்லி விதை போன்று கொத்தமல்லி இலையிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த கொத்தமல்லி இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.