சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்!

சாலையில் கிடந்த சாக்கு மூட்டை! பிரித்து பார்த்தால் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டின் கார்கோடா பகுதியில் நேற்று முன்தினம் காலை சாலையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூட்டையை பார்த்த போது அதில் முகத்தில் காயங்களுடன் நிர்வாண பெண்ணின் உடல் இருந்தது.

அதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒரு நபர் சாக்குப்பையை தோளில் சுமந்து வந்து கொட்ட இடம் தேடுவது தெரிய வந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த மூட்டையில் இருந்தது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் என போலீசார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் சாக்கு மூட்டையை எடுத்து வந்த நபரின் விவரங்கள் குறிந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றானர்.

கடந்த மாதங்களாக இவ்வாறான சடலங்கள் மீட்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றது இந்த மர்ம மனிதன் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

Leave a Comment