சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Photo of author

By Parthipan K

சோப்பு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

கொரோனோ வைரஸ் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிகம் பரவுகிறது. இதனால் பள்ளிகளில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் வழிபாட்டுக் கூட்டங்களில் ஆசிரியர்கள் தினமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு தூய்மையை மேலும் மேம்படுத்த பள்ளிகளில் சோப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

செங்கோட்டையன் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளதால் பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் எப்போது அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள் நகரப்பள்ளிகளில் பெரும்பாலும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. தற்போது கிராமங்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசு ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் காவல்துறையினர் 365 நாட்கள் வேலை செய்கின்றனர்.ஆசிரியர் 210 நாட்கள் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.