12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அதிரடி அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அசாம் மாநில அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்பொழுது அசாம் மாநில அரசு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்ற 30209 மாணவிகளுக்கும், 5566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசாக வழங்குவதற்கு அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கின்றது.
டாக்டர் பனிகாந்தா ககாதி விருது என்ற திட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 35775 மாணவ மாணவியருக்கு நவம்பர் 30ம் தேதி ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படவுள்ளது.
அதன்படி 75 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த 5566 மாணவர்களுக்கும், 60 சதவீதத்திற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த 30209 மாணவிகளுக்கும் பரிசாக ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் வழங்கும் விழா நவம்பர் மாதம் 30ம் தேதி வழங்கப்படவுள்ளது.
அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 27183 மாணவர்களுக்கு 15000 ரூபாய் உதவித் தொகை வழங்குவது நவம்பர் 29ம் தேதி வழங்கப்படவுள்ளது என்று அசாம் மாநில அரசு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.