நடிகர் திலகம் சிவாஜியிடமே ரீடேக் கேட்ட இயக்குனர்..தேவர் மகன் ஷூட்டிங் சுவாரசியங்களை பகிர்ந்த கமல்!

0
63
#image_title

நடிகர் திலகம் சிவாஜியிடமே ரீடேக் கேட்ட இயக்குனர்..தேவர் மகன் ஷூட்டிங் சுவாரசியங்களை பகிர்ந்த கமல்!

நடிகர் சிவாஜி கணேசன், கடந்த 1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன் , பஞ்சு என்ற இரட்டையர்கள் இயக்கிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தன் பெயரை நிலை நாட்டினார்.

அதைத்தொடர்ந்து கள்வனின் காதலி, பாசமலர், நான் பெற்ற செல்வம், தெய்வப்பிறவி, நவராத்திரி உள்ளிட்ட படங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா துறையில் நடிப்பிற்கு புது இலக்கணம் வகுத்தவர் என்றால் அது சிவாஜி கணேசன் தான். நடிப்பு பேரகராதி என்ற பெருமைக்குரியவர். செவிலியர் விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட விருதுகள் இவரால் பெருமை அடைந்தன. கடந்த 1960 இல் ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

ரஜினி, கமல், விஜய், முரளி, பிரபு உள்ளிட்டோர் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் கமல் கூட்டணியில் தேவர் மகன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பரதன் இயக்கியிருந்தார். இதற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருந்தனர். வன்முறை வேண்டாம் என்பதே இந்த படத்தின் மையக்கருவாக அமைந்திருந்தது. கமல் கிளைமாக்ஸில் பேசும் வசனங்கள் இன்றளவும் சமூகத்தில் ஒரு விவாத பொருளாக பேசப்படுகிறது. இந்திய அளவில் சிறந்த 10 படங்களை தேர்ந்தெடுத்தால் தேவர் மகன் திரைப்படம் தவிர்க்க முடியாத படமாக இருக்கும். இன்று வரையிலும் தேவர் மகன் படம் பற்றிய பேச்சு இல்லாத நிகழ்ச்சிகளையே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு திரைக்கதை வாயிலாக இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களான சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த இந்த படம் 40வது இந்திய தேசிய விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை வென்றது.

இத்தகைய பெருமைக்குரிய தேவர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சில விஷயங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ” சிவாஜி சாரிடம் இரண்டாவது டேக் கேட்பதற்கு தைரியமே வராது.

தேவர்மகன் படத்தில் சிவாஜி சார் நடித்த காட்சி ஒன்றை இயக்குனர் பரதன் நன்றாக இல்லை என்று கூறினார். நல்லா இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவரிடம் போய் எப்படி நல்லா இல்லை என்று சொல்ல முடியும் என்றேன். ஆனால், சொல்லனுமே எனக்கு பிடிக்கவில்லை என்று பரதன் கூறினார்.

வெளியூரில் இருந்து வந்துவிட்டு எங்கள் ஆளிடம் அந்த மாதிரி எல்லாம் சொல்லக்கூடாது என்று நான் சொன்னேன். உடனே சிவாஜி சார், என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்னிடம் சொல்லித் தொலையுங்கள். நல்லா இல்லையா என்றார். ஆமாம் என்று பரதன் கூற நான் பரதனை முறைத்தேன். என்ன வேணும் இப்ப சொல்ல சொல்லு என்று சிவாஜி சார் கூறியவுடன், எங்க நம்மள நடிச்சு காட்ட சொல்லிருவாரோ என்று நான் பயந்தேன்.

கேரக்டர் பெரிய தேவர் ஆனால் இது சின்ன தேவர் மாதிரி இருந்துச்சு . பெரிய தேவர் தான் எங்களுக்கு வரவேண்டும் என்று பரதன் சொன்னார். வருவார்… போங்க” என்று சிவாஜி கணேசன் தன் ஸ்டைலில் கூறியதாக நடிகர் கமல்ஹாசன் கலகலப்பாக பேசியிருந்தார்.

author avatar
Savitha