cricket: இந்திய அணியில் மீண்டும் பயிற்சியில் இறங்கிய அஸ்வின் ஜடேஜா மூன்றாவது போட்டியில் யார் உள்ளே.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடன் 3 வது போட்டிக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கு காரணம் இந்திய அணி நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் சரிவு ஏற்பட்டது.
இதனால் ஆஸ்திரேலியா உடன் மோதவுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. இந்நிலையில் 5 போட்டி கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி ஒரு வெற்றியும்,ஆஸ்திரேலியா அணி ஒரு வெற்றியும் பெற்று 1-1 என்ற விகிதத்தில் சமநிலையில் உள்ளன.
இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு சரிந்தது. இதனால் இந்த மூன்றாவது போட்டியானது மிக முக்கிய போட்டியாக பார்க்கபடுகிறது.
ஒரு டிரா கூட இல்லாமல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இறுதி போட்டிக்கு செல்லும். இந்நிலையில் இந்திய அணியில் வலைப்பயிற்சியில் மூத்த வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வாசிங்க்டன் க்கு பதிலாக அஸ்வின் நிதிஷ் க்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.