எலான் மஸ்க் கிற்கு தனி அமைச்சகம் மற்றும் அமைச்சர் பதவி!!அரசு நிர்வாகிகள் நீகப்படுவார்களா??

Photo of author

By Vijay

USA: அதிபராக வெற்றி வெற்றி  டிரம்ப் எலான் மஸ்கிற்கு என தனியான அமைச்சரவை ஒதுக்கி அமைச்சர் பதவி வழங்கியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கு எலான் மஸ்க் டிரம்ப் க்கு நேரடியாக ஆதரவளித்திருந்தார்.  அனைவரும் எதிர்பார்த்த படியே எலான் மஸ்க் குக்கு என அரசாங்கத்தின் முக்கிய துறையான திறன் துறையை அதாவது DOGE துறைக்கு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளார்.

ஒரு காலத்தில் ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாக அரசியல் கொள்கைகளை மாற்றி கொண்டுள்ளார். பல விஷயங்களில் பைடனுக்கும், கமலா ஹாரிஷுக்க்கும் எதிரான முடிவுகளை  எடுத்து வருகிறார். இந்த முறை எலான் மஸ்க் டிரம்ப் க்கு நேரடியாக ஆதரவை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் இந்த முறை தேர்தலுக்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் செய்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த முற்றி அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஏலம் மஸ்க் க்கு ஆட்சியை சிறப்பாக வழிநடத்துவதற்கான அமைச்சரவையில் புதிய அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார்.

அந்த அமைச்சரவையின் துறையின் பெயர் DOGE அமைச்சரவை அதாவது அரசாங்கத்தின் திறன் துறை department of efficiency என்பதாகும். எலன் முஸ்க் ஏற்கனவே x தளத்தை வாங்கும் போது அதில் பணியாற்றிய பல பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கினார். இந்நிலையில் அரசு நிர்வாகிகளை நீக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது