பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!

0
223
#image_title

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!

கோவையில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கைவிட வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லா அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

தங்களது கோரிக்கைகளை தொடர்பாக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். சிவானந்தா காலனி பகுதியில் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

Previous articleதானாக தரையிறங்கும் மறுசுழற்சி ராக்கெட் சோதனையில் வெற்றி!!
Next articleநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எடப்பாடி புதிய தகவல்! அண்ணாமலை கருத்து!!